டான்சர் ரமேஷ் தற்கொலையா, கொலையா? முதல் மனைவி புகார்! தீவிர விசாரணை
டான்சர் ரமேஷ்
டிக்டாக்கில் தனது நடன திறமையை காட்டி பாப்புலர் ஆனவர் டான்சர் ரமேஷ். தான் வறுமையில் வாடுவதாகவும், வாய்ப்பே கிடைக்கவில்லை என்றும் அவர் கடந்த வருடம் பேட்டி அளித்தார். அதன் பின் அவரது திறமையை பார்த்து டிவி மற்றும் படங்களில் வாய்ப்பு கிடைத்தது.
சமீபத்தில் ரிலீஸ் ஆன அஜித்தின் துணிவு படத்திலும் அவர் ஒரு சீனில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் நேற்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் 10ம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என செய்தி வந்தது.
டான்சர் ரமேஷுக்கு இரண்டு மனைவிகள் இருக்கும் நிலையில், அவரது குடிப்பழக்கத்தால் அடிக்கடி பிரச்சனை வந்தாதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் நேற்று தற்கொலை செய்துகொண்டதாக இரண்டாம் மனைவி தரப்பு கூறுகிறது.
பிறந்தநாள் பார்ட்டி கொடுக்க 2ம் மனைவி பணம் கொடுக்கவில்லை என்று தான் அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
கொலையா?
ஆனால் டான்சர் ரமேஷ் மரணம் கொலையாக இருக்கலாம் என அவரது முதல் மனைவி போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.
போலீசார் தற்போது புகாரின் பேரில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒன்று சேர்ந்த பாரதி கண்ணம்மா! ஆனால் கடைசியில் வெச்சாங்க பாரு ஒரு ட்விஸ்ட்

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
