2000 கோடி வசூலித்த படம்.. எனக்கு ‘வெறும்’ 1 கோடி தான் கொடுத்தாங்க! - பபிதா போகட் சர்ச்சை
அமீர் கான் நடித்த தங்கல் (Dangal) படம் 2016ல் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் ரிலீஸ் ஆகி வசூலை குவித்தது அந்த படம்.
ஒருவர் தனது இரண்டு மகள்களுக்கும் சின்ன வயதில் இருந்து எப்படி மல்யுத்தத்தில் பயிற்சி கொடுத்து ஜெயிக்க வைக்கிறார் என்பது தான் கதை. அந்த பெண்கள் படும் கஷ்டங்கள் திரையில் பார்த்து ரசிகர்களும் உருகினார்கள்.
பபிதா போகட்
மல்யுத்த வீராங்கனை பபிதா போகட் குடும்பத்தின் உண்மையான கதை தான் இந்த படம்.
படம் ரிலீஸ் ஆகி 8 வருடங்கள் கழித்து தற்போது பபிதா போகட் அளித்திருக்கும் பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
"Dangal படம் 2000 கோடி வசூல் செய்தது. ஆனால் என் குடும்பத்திற்கு வெறும் 1 கோடி தான் கிடைத்தது" என அவர் கூறி இருக்கிறார்.
Thook Jihad promoter #AamirKhan who made movie “Dangal” on the life of Mahavir Singh Phogat and his daughter Geeta and Babita Phogat , earned 2000 + crores from the movie.
— Amitabh Chaudhary (@MithilaWaala) October 23, 2024
But he gave only ₹1 crore to the Phogat family
Typical Bollywood Scam pic.twitter.com/FNuWfqRzO6
வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
அவரை நெட்டிசன்கள் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர்.
"1 கோடி ரூபாய் சின்ன தொகை இல்லை."
"யாரென்றே தெரியாமல் இருந்த உங்களை நாடு முழுவதும் பிரபலம் ஆக்கியது அந்த படம் தான்."
"ஆரம்பத்தில் ஒப்பந்தம் போட்டுவிட்டு இப்போது ஏன் பணத்திற்காக பேசுறீங்க" என்றெல்லாம் நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
சில ட்விட்டர் பதிவுகள் இதோ..