விஜய் சொல்லியும் கேட்காமல் அப்படி ஒரு வேலை செய்த டேனியல் பாலாஜி- அப்படி ஒரு காதல்
டேனியல் பாலாஜி
சினிமாவில் வில்லனாக மிரட்டினாலும் நிஜத்தில் நல்ல மனிதராக யாருக்கும் எந்தவொரு பிரச்சனையும் கொடுக்காமல் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டு அதில் தனது கவனத்தை செலுத்தி வந்தவர் நடிகர் டேனியல் பாலாஜி.
நடிகர் என்பதை தாண்டி இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு சினிமாவில் களமிறங்கியுள்ளார், ஆனால் கடைசியில் மொத்தமாக சினிமா ஆசை இல்லாமல் ஆன்மீகத்தில் இறங்கியிருக்கிறார்.
சொந்தமாக கோவில் எல்லாம் கட்டி படிக்க நினைப்பவர்களுக்கு பண உதவி செய்து வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
விஜய்
டேனியல் பாலாஜி, விஜய்யுடன் பைரவா மற்றும் பிகில் படத்தில் நடித்துள்ளார்.
தற்போது பைரவா படத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்த தகவல் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது முகத்தில் விழும் அளவுக்கு நீண்ட முடியுடன் மிரட்டி வந்த டேனியல் பாலாஜியை பைரவா படத்திற்காக பரதன் மொட்டை அடிக்க கூறியுள்ளார்.
இதனை கேள்விப்பட்ட விஜய் வேண்டாம், இதனால் மற்ற படங்கள் பாதிக்கப்போகிறது, இயக்குனரிடம் முடியாது என்று சொல்லிவிட கூறியிருக்கிறார்.
ஆனால் கதைக்கு தேவை என்பதால் டேனியல் பாலாஜி விஜய் கூறியும் மொட்டை அடித்து நடித்துள்ளார். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
