அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள டேனியல் பாலாஜியின் உடல்.. தானாம் செய்யப்பட்ட கண்கள்
டேனியல் பாலாஜி
நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவு நம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாரடைப்பு காரணமாக மரணமடைந்த டேனியல் பாலாஜிக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 48 வயதாகும் இவர் சித்தி சீரியல் மூலம் அறிமுகமானார்.
வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடித்து திரையுலகில் வில்லனாக மிரட்ட துவங்கினார். பின் வேட்டையாடு விளையாடு, வடசென்னை, பைரவா, காக்க காக்க, பிகில் போன்ற படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய உடல் தற்போது புரசைவாக்கத்தில் அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவருடைய உடலுக்கு ஏராளமான பிரபலங்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கண்கள் தானம்
இந்த நிலையில் மண்ணைவிட்டு மறைந்தாலும், மற்றவர்களுக்கு உதவும் வகையில் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. ஆம், டேனியல் பாலாஜியின் கண்கள் அவருடைய குடும்பத்தினரால் தானம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1000 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையில்.. - டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு News Lankasri
