ஹாரி பாட்டர் நடிகருக்கு திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தை.. வைரலாகும் புகைப்படங்கள்
ஹாரி பாட்டர் படங்களில் நடித்து உலகம் முழுக்க பிரபலம் ஆனவர் Daniel Radcliffe. அவர் படங்களில் நடிக்க தொடங்கியபோது அவருக்கு வயது 12 தான். ஹாரி பாட்டர் படங்கள் 8லும் அவர் நடித்து இருக்கிறார்.
Daniel Radcliffe அவரது காதலி Erin Darke இருவரும் தற்போது முதல் குழந்தை பெற்று இருக்கின்றனர். அவர்கள் 2013ல் Kill Your Darlings பட செட்டில் சந்தித்து காதலிக்க தொடங்கினார்கள்.

குழந்தை
நடிகர் Daniel Radcliffe தற்போது அவரது குழந்தையை pramல் வைத்து தள்ளிக்கொண்டு செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
குழந்தை பிறந்திருப்பதை Daniel Radcliffeன் மேனேஜரும் உறுதி செய்து இருக்கிறார். இருப்பினும் பிறந்தது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்கிற விவரம் இன்னும் வெளிவரவில்லை.
