தசரா திரை விமர்சனம்

By Tony Mar 30, 2023 10:10 AM GMT
Report

தெலுங்கு சினிமா தற்பொதெல்லாம் ஆஹா ஓஹோ கமர்ஷியல் தாண்டி, மெல்ல யதார்த்தத்தை நோக்கி பயணக்கிறது, அந்த யதார்த்தத்திலும் மாஸை அளவாக சேர்த்து ஹிட் அடிக்கின்றனர், அந்த வரிசையில் நானி நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள தசரா இதில் எந்தவகை படம் எப்படியுள்ளது என்பதை பார்ப்போம்.

கதைக்களம்

முழுக்க முழுக்க நிலக்கரி சூழ்ந்துள்ள, காற்றே கருப்பாக வீசும் வெறும் 160 குடும்பத்துடன் ஓர் ஊரில் நானி தன் நண்பர்களுடன் சேர்ந்து நிலக்கரி திருடி வாழ்க்கையை ஓட்டுகிறார்.

தசரா திரை விமர்சனம் | Dasara Review

அப்படி சந்தோஷமாக செல்லும் வாழ்க்கையில் தன் நண்பனுக்காக உயிரையே கொடுக்கும் நானி, தன் நண்பன் காதலிக்கிறான் என்று தெரிந்து தான் கீர்த்தி சுரேஷ் மீது வைத்துள்ள காதலை மறைக்கின்றார்.

ஒரு கட்டத்தில் தன் நண்பன் மற்றும் கீர்த்தி சுரேஷ் காதல் திருமணம் வரை செல்ல, அன்று இரவே அது நானி நண்பனுக்கு தெரிய வருகிறது.

தசரா திரை விமர்சனம் | Dasara Review

இதனால் நானி மிக மன வேதனை அடைய, அன்றிரவு நானியை சந்தித்து பேச வரும் நண்பனை ஒரு கூலிப்படை நானி கண்முன்பே கொல்கிறது. இவரை யார் கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல் 

நானி அட இப்ப தான் லவ்வர் பாயாக பார்த்தோம், அதற்குள் ரக்கட் பாயாக வந்துவிட்டாரே, அதுவும் வெறித்தனமான ரக்கட் பாய், எந்நேரமும் குடியை மட்டுமே நினைத்து வாழும் ஊர் மக்கள்.

குடியால் நடக்கும் மிகப்பெரும் அரசியல் அதை தொடர்ந்து நடக்கும் தேர்தல் என ரங்கஸ்தலம் படத்தின் சாயல் கொஞ்ச ஹெவியாகவே முதல் பாதியில் உள்ளது, படமும் விறுவிறுவென செல்கிறது.

தசரா திரை விமர்சனம் | Dasara Review

ஆனால், இரண்டாம் பாதியில் நண்பர் இறந்ததும், நானி எடுக்கும் சில முடிவுகள் அதை தொடர்ந்து வரும் காட்சிகள் கொஞ்சம் மெல்ல நகர்ந்தாலும், கிளைமேக்ஸ் நெருங்க படம் பற்றிக்கொள்கிறது.

அதிலும் கிளைமேக்ஸ் 100 பேர் வந்தாலும் நானி கத்தியால் குத்தி கிழிக்கும் காட்சி கொஞ்சம் யதார்த்தம் மீறியிருந்தாலும், திரையில் பார்க்க கூஸ்பம்ஸ் தான்.

தசரா திரை விமர்சனம் | Dasara Review

கீர்த்தி சுரேஷ் அப்படியே கதாபாத்திரமாக ஜொலிக்கின்றார், மலையாள நடிகர் Shine Tom Chacko முதல் தெலுங்கு படத்திலேயே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

படம் முழுவதும் நிலக்கரி புகை, ஒரு விதமான டார்க் டோன் ஒளிப்பதிவாளர் காட்சிப்படுத்திய விதம் அருமை, சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை ஏதோ தமிழ் படத்தில் கேட்டது போன்ற உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை. 

க்ளாப்ஸ்

நானி நடிப்பு, தூள் கிளப்பியுள்ளார்.

படத்தின் முதல் பாதி சண்டைக்காட்சிகள்.

பல்ப்ஸ்

இரண்டாம் பாதி கொஞ்சம் தொய்வு.

டுவிஸ்ட் என்பதை ஆரம்பத்திலேயே உடைத்தது.

மொத்தத்தில் தசரா திருப்தியாக கொண்டாடிவிட்டு வரலாம்.

தசரா திரை விமர்சனம் | Dasara Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US