தாஸ் பட புகழ் நடிகை ரேணுகா மேனனை நியாபகம் இருக்கா?- இவ்வளவு பெரிய மகள்களா, குடும்ப போட்டோ
ரேணுகா மேனன்
தமிழ் சினிமாவில் அறிமுகமான காலத்தில் ஏராளமான ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் ரேணுகா மேனன்.
தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
நம்மள் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தமிழில் 2005ம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த தாஸ் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவருடைய முதல் திரைப்படமே மிகப்பெரிய பிரபலத்தை தந்தது. அதன்பிறகு பிப்ரவரி 14, கலாபக் காதலன் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
திருமணம்
இவர் 2006ம் ஆண்டு சுராஜ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கேரளாவில் பிறந்த சுராஜ் மேனன் தற்போது திருமணத்திற்கு பிறகு கலிபோர்னியாவில் செட்டில் ஆகிவிட்டார்.
தற்போது அவர் தனது குடும்பத்துடன் லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படம் வெளியாக இவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா என ரசிகர்கள் போட்டோவிற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.