9 நாட்களில் டிசி திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான டிசி திரைப்படம், 9 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
டிசி
லோகேஷ் கனகராஜ் - அருண் மாதேஸ்வரன் - அனிருத் கூட்டணியில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த டிசி திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்
டிசி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம். அந்த வகையில், 9 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, டிசி திரைப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ. 76 கோடி வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.