திடீரென பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவுக்கு வாழ்த்து கூறிய டிடி- ஏன் தெரியுமா?3
கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரே பெயரை மந்திரம் போல் கூறிக்கொண்டு இருந்தார்கள். அதுவேறு யாரும் இல்லை பிக்பாஸ் புகழ் லாஸ்லியா தான்.
இலங்கை தமிழ்ப் பெண்ணான இவர் பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். நிகழ்ச்சியை முடித்த கையோடு படங்களும் கமிட்டாகி இப்போது நடித்தும் வருகிறார்.
இடையில் அவரது அப்பா திடீரென உயிரிழந்தார், எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் லாஸ்லியா சில மாதங்கள் அந்த பக்கமே காணாமல் இருந்தார்.
இப்போது மீண்டும் இன்ஸ்டாவில் போட்டோ ஷுட் புகைப்படங்களை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டார். அண்மையில் ஒரு பேட்டியும் கொடுத்துள்ளார். அதில் தனக்கு இன்ஸ்பிரேஷன், சிவகார்த்திகேயன் மற்றும் டிடி தான் என கூறியுள்ளார்.
இதனை கண்ட டிடி தனது இன்ஸ்டாவில் லாஸ்லியாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.