பாலிவுட்டில் தடம் பதித்த பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி டிடி ! பதிவை வெளியிட்டு அவர் சொன்ன விஷயம்..

By Jeeva Jul 10, 2022 11:15 AM GMT
Report

பாலிவுட்டில் டிடி

தொகுப்பாளினியாக கடந்த 20 வருடத்திற்கும் மேலாக தொலைக்காட்சியில் நம்மை மகிழ வைத்து வருபவர் திவ்யதர்ஷினி.

இவர் தற்போது முன்பு போல் இல்லாமல், முன்னணி நட்சத்திரங்களின் திரைப்பட ப்ரோமோஷன் நேர்காணலை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

தொகுப்பாளினியாக மட்டுமின்றி தொடர்ந்து தற்போது படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். ஆம், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள Coffee With காதல் எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரமாக திவ்யதர்ஷினி நடித்துள்ளார்.

இந்நிலையில் டிடி தற்போது பாலிவுட் திரைப்படமான Shamshera படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரை பேட்டியெடுத்துள்ளார்.

இது குறித்து புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டுள்ள டிடி “பாலிவுட்டில் தமிழ் தொகுப்பாளர்களுக்கு இது மேலும் வழிகளைத் திறக்கும் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். 

 

சூர்யா ஸ்டார் இமேஜை ஒதுக்கிவைத்துவிட்டு இதை செய்தார்: பாராட்டிய விஜய் சேதுபதி

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US