நடனமாடி கொண்டிருந்த டிடி மீது எறியப்பட்ட செருப்பு! இணையத்தில் பரவி வரும் வீடியோ..
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி.
இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
சமீபத்தில் கூட நயன்தாரா கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.
திவ்யதர்ஷினி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது அவர் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது திடீரென அவரது குடும்பத்தினர் அவர் மீது செருப்பை வீசிய வீடியோ வைரல் ஆகியுள்ளது.
மேலும் டிடி "’விநாயகர் சதுர்த்திக்கு ஒரு ரீல் போடணும்ன்னு நெனச்சு, சரி ட்ரெண்டிங்கில் ஒன்று ட்ரை பண்ணேன். எங்க வீட்டு ரியாக்சன் இதுதான், அதை பார்த்து சிரிச்சுட்டு போங்க, செம அடி" என்று பதிவு செய்துள்ளார்.