டிடி-க்கு என்னாச்சு? வாக்கிங் ஸ்டிக் உடன் வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளராக இருந்து பாப்புலர் ஆனவர் டிடி. அவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.
டிடி தற்போது சின்னத்திரையில் இருந்து விலகி இருந்தாலும் பட விழாக்கள், டாப் நடிகர்களின் பேட்டிகள் என அவ்வப்போது தொகுத்து வழங்கி வருகிறார்.
வாக்கிங் ஸ்டிக் உடன் வந்த டிடி
தற்போது டிடி இலங்கையில் நடக்க இருக்கும் ஹரிகரன் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருக்கிறார். அவர் உடன் மிர்ச்சி சிவா, ஸ்வேதா மோகன் உள்ளிட்டோரும் சென்றிருக்கும் நிலையில் ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டு இருக்கிறது.
டிடி வாக்கிங் ஸ்டிக் உடன் நடந்து வரும் வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கி இருக்கிறது. அவருக்கு கால் முட்டியில் ஆபரேஷன் செய்திருப்பதால் நீண்ட நேரம் நிற்க முடியாது என அவரே கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது கூட அவர் சேரில் உட்கார்ந்தபடியே தான் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மணிக்கணக்கில் நிற்க முடியாது என்பதாலேயே விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வருவதில்லை எனவும் டிடி முன்பே கூறியது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri
