Kdrama எல்லாம் இப்போ வந்தது, விஜய் சார் அப்போவே அப்படி.. டிடி சொன்ன விஷயம்
சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளராக இருந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஆனால் சமீப காலமாக அவர் விருது விழாக்கள், பட விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் இன்ஸ்டாவில் அவருக்கு 2.7 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் வெளியிடும் போட்டோக்களுக்கு நல்ல வரவேற்பும் தொடர்ந்து கிடைத்து வருகிறது.
விஜய் சார் ஸ்டைல்
இந்நிலையில் டிடி தற்போது விஜய் சார் ஸ்டைலை பின்பற்றுவதாக கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். டி-சர்ட் அணிந்து அதன் மீது சர்ட் அணிவது தான் அந்த ஸ்டைல்.
இந்த ஸ்டைல் தற்போது Kdramaல் கொரியன் பிரபலங்கள் பயன்படுத்துவதை பார்க்கலாம். ஆனால் விஜய் சார் அதை அப்போதே செய்தவர் என டிடி கூறியுள்ளார்.
"K dramaலாம் இப்போ வந்தது. நாங்கலாம் அப்போவே அந்த மாதிரி" என டிடி குறிப்பிட்டு உள்ளார்.