முன்னணி நடிகைகளை தொடர்ந்து மாலத்தீவில் DD, அவர் வெளியிட்ட நீச்சல் குள புகைப்படம்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி தான், திவ்யதர்ஷினி என்கிற டிடி. தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல், வெள்ளித்திரையில் உருவாகும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இவரை தற்போது அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. ஓரிரு முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.
சமீபத்தில் கூட, நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கி இருந்தார்.
இந்நிலையில் தற்போது திடீரென டிடி மாலத்தீவிற்கு அவர் சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பக்கத்தில் பதிவிட்டு அதனை நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும் கடந்த சில தினங்களாகவே முன்னணி நடிகைகள் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.