சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?
சந்தானம்
நடிகர் சந்தானம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர். மன்மதன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான இவர் இதன்பின் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து, தனது நகைச்சுவையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார். அதன்பின் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் இவர் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் நேற்று வெளியானது.
இந்த படத்தில் கவுதம் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த் என பலர் நடித்து இருக்கின்றனர். மேலும், சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஆர்யா தான் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

செய்துள்ள வசூல்
தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் ரூ. 3.5 கோடி வசூல் செய்துள்ளது.

Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
சிட்னியில் யூதர்களின் கொண்டாட்டத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு! 10 பேர் மரணம்..தெறித்து ஓடிய மக்கள் News Lankasri