அஜித்துக்கு தங்கையாக நடிக்க மறுப்பு விஜய் டிவி தொகுப்பாளினி.. காரணம் என்ன தெரியுமா
வேதாளம்
சிறுத்தை சிவா - அஜித் கூட்டணியில் இதுவரை பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதில் ஒன்று தான் வேதாளம். 2014ம் ஆண்டு வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடிகை லட்சுமி மேனன் நடித்திருந்தார். ஆனால், முதன் முதலில் இந்த வாய்ப்பு யாருக்கு கிடைத்தது என்று உங்களுக்கு தெரியுமா.
தொகுப்பாளினி டிடி
அது வேறு யாருமில்லை விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-க்கு தான் இந்த வாய்ப்பு முதலில் கிடைத்துள்ளது. ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். காரணம் அவருக்கு அப்போது காலில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் வெளிப்படையாக டிடி பேசியுள்ளார். இதில், 2014ல் எனக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்போது தான் எனக்கு காலில் அறுவை சிகிச்சை முடிந்து 20 நாட்கள் ஆகியிருந்தது. என்னால் நடிக்க முடியாது என்கிற பயத்தில் நான் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன்.
ஆனால், கண்டிப்பாக அவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என இருந்தேன். அதன்பின் தான் எனக்கு தெரிந்தது, அது அஜித் சாரின் வேதாளம் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கவேண்டிய ரோல் என்று என அவர் கூறியுள்ளார்.

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
