சமீபத்தில் திருமணமான கத்ரீனா கைப்புக்கு கொலை மிரட்டல்! நடிகர் கைது.. அதிர்ச்சியில் பாலிவுட்
முன்னணியில் இருக்கும் நடிகர்கள் என்றால் சமூக வலைத்தளங்களில் ட்ரோல்களை சந்திக்க வேண்டி இருக்கும், அது வழக்கமாகவும் ஆகிவிட்டது. மேலும் நடிகர்களின் ரசிகர்கள் சண்டை போடுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட கத்ரீனா கைப் மற்றும் அவரது கணவர் விக்கி கௌஷலுக்கு சமூக வலைத்தளத்தில் கொலை மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த நபரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
கத்ரீனா கைப்பை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து stalk செய்து வந்த Manvinder Singh என்ற அந்த நபர், அவரை திருமணம் செய்ய நினைப்பதாக தெரிவித்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.
மேலும் கத்ரீனா திருமண போட்டோக்களை மார்ப் செய்து அவரது பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். யாரென்றே தெரியாத நபர் கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் விக்கி கௌஷல் புகார் அளித்த நிலையில் போலீசார் அவனை கைது செய்திருக்கின்றனர்.
கைதான நபரும் ஒரு நடிகர் தான் என்றும் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
