சம்பளத்தை தனது கணவருக்கு நிகராக கேட்டதால், படத்திலிருந்து நீக்கப்பட்ட தீபிகா படுகோனே!
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் தான் நடிகை தீபிகா படுகோனே, இவருக்கு பெரியளவிலான ரசிகர்கள் காணப்படுகிறார்கள்.
மேலும் கதாநாயகனுக்கு நிகராக தனக்கும் ஊதியம் வேண்டும் என்று பாலிவுட்டில் தொடர்ந்து தீபிகா குரல் கொடுத்து வருகிறார். ஆண்- பெண் கலைஞர்கள் இடையேயான ஊதிய முரண்பாடு குறித்தும் அவர் பலமுறை வெளிப்படையாக கருத்து கூறியுள்ளார்.
இந்நிலையில், பத்மாவதி, பாஜிராவ் மஸ்தானி, ராம்லீலா போன்ற திரைப்படங்களை இயக்கியவரான சஞ்சய் லீலா பன்சாலி தற்போது பைஜு பாவ்ரா என்னும் பெயரில் புதிய திரைப்படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ரன்வீர் சிங் நடிக்க வாய்ப்புள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக அவரின் மனைவி தீபிகா படுகோனையே நடிக்க வைக்க யோசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இதனிடையே தனது கணவருக்கு சமமான ஊதியம் வேண்டும் என தீபிகா நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்படத்தில் தீபிகாவை நடிக்கவைக்கும் எண்ணம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu