தீபாவளியை குறிவைக்கும் பீஸ்ட் படக்குழு ! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னையில் நடந்து வருகிறது, அண்மையில் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் மற்றும் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டானது.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் படம் குறித்த புதிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது, அந்த வகையில் பீஸ்ட் படத்தின் முதல் பாடலை வருகிற தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஏற்கனவே முடித்துவிட்டதாகவும், வரும் தீபாவளி அன்று பீஸ்ட் படத்தின் இன்ட்ரோ சாங்கை வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.