விபத்தில் இறந்த நடிகர் காதலியுடன் எடுத்த கடைசி போட்டோ! கண்ணீர் விடும் பிரபலங்கள்
பிரபல ஹிந்தி நடிகர் தீப் சித்து என்பவர் இன்று நடந்த ஒரு சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்கிற செய்தி பாலிவுட்டில் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
நொறுங்கிய கார் விபத்து பகுதியில் இருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. அவரது காதலி ரீனா ராய் காரில் இடதுப்பகுதியில் இருந்தநிலையில் ஏர்பேக் அவரது உயிரை காப்பாற்றியது. அவர் சீட் பெல்ட் அணிந்து இருந்தார். ஆனால் தீப் சித்துவின் ஏர்பேக் வெடித்துவிட்டதால் அவர் உயிரிழந்தார்.
தீப் சித்து மற்றும் அவரது காதலி இருவரும் காதலர் தினத்தன்று வெளியிட்ட போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வாழ்க்கை எவ்வளவு நிரந்தரம் இல்லாதது என குறிப்பிட்டு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.