'பணக்காரங்க எல்லாம் ரொம்ப மோசமானவங்கன்னு'.. மனம் திறந்து பேசிய நடிகை தீபா
நடிகை தீபா
சின்னத்திரையில் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றி தொடர்களில் நடித்து வெள்ளித்திரையில் கால்பதித்தவர் நடிகை தீபா ஷங்கர். கடைக்குட்டி சிங்கம், டாக்டர் போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
மேலும் குக் வித் கோமாளி சீசன் 2ல் போட்டியாளராக களமிறங்கி இவர் செய்த கலாட்டாவை எல்லாம் யாராலும் மறக்கவே முடியாது. டைட்டில் வெல்ல வில்லை என்றாலும் மக்கள் மத்தியில் குக் வித் கோமாளி மூலம் தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்டார்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி குறித்து நடிகை தீபா பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது:
"பணக்காரங்க எல்லாம் மோசமானவங்கன்னு நினைச்சுட்டு இருந்தேன், அதெயெல்லாம் என்னை தூக்கி போடா வைத்தது தம்பி சிவகார்த்திகேயன் மனைவிதான். சிவகார்த்திகேயன் தம்பி என்னை ஒரு வாட்டி அவர் வீட்டுக்கு வர சொல்லியிருந்தார். நான் போகவில்லை, காரணம் பயம். பெரிய நடிகர் வீட்டிற்கு போறோம், வாட்ச்மென் நீ யாரு வெளியே போங்கனு சொன்னா அசிங்கமா போய்விடும் என்று போகவில்லை.

ஆர்த்தி அவங்க பிறந்தநாள் அன்று, ஹோட்டலுக்கு என்ன சாப்பிட அழைத்திருந்தார். பெரிய நடிகர் நடிகைகள் வந்து இருந்தாங்க. ஆனால் அவங்க என் பக்கத்தில் வந்து அமர்ந்து நீங்க சாப்பிடணும், நீங்க சாப்பிடுற அழகை நான் பாக்கணும்னு சொல்லிவிட்டு ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாங்க, அத நான் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன்" என கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri