குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய நடிகை ஸ்ரேயா, அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்..
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாகவும், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் இருந்தவர் நடிகை ஸ்ரேயா.
கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா, திருமணத்துக்கு பிறகு தனது கணவர் Andrei Koscheev-வுடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார்.
மேலும் கடந்த 2020 லாக்டோவ்னில் நடிகை ஸ்ரேயாவிற்கும், Andrei Koscheevவிற்கும் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது ஸ்ரேயா தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அவர் மகளின் புகைப்படத்தை அவர் பதிவிடவில்லை.