மகள் முகத்தை முதல் முறையாக காட்டிய தீபிகா படுகோன்! படுவைரல் ஸ்டில்கள்
பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக இருப்பவர் தீபிகா படுகோன். அவர் தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய படங்களிலும் தற்போது நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அவர் அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் தீபிகா சமீபத்தில் கல்கி 2ம் பாகத்தில் இருந்து விலகி இருந்தார். அவரது கோரிக்கைகள் ஏற்கும் வகையில் இல்லை என தயாரிப்பாளர் கூறி இருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் குழந்தைக்கு தாயான பிறகு ஷூட்டிங் வர பல கண்டிஷன்கள் போடுகிறார், ஒரு நாளுக்கு 8 மணி நேரம் தான் ஷூட்டிங் வருவேன் என சொல்வதாகவும் முன்பு சர்ச்சை கிளம்பியது. அதற்காக தான் தீபிகா அனிமல் பட இயக்குனரின் அடுத்த படமான ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகள் போட்டோ
தீபிகா மற்றும் ரன்வீர் ஜோடி முதல் முறையாக தங்கள் குழந்தை போட்டோவை வெளியிட்டு இருக்கின்றனர்.
அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.




