முதல் முறையாக இணையும் தளபதி விஜய், தீபிகா படுகோண்.. அதுவும் இந்த நடிகரின் படத்தில்
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. விஜய்யின் பிறந்தநாள் அன்று தளபதி 67 குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என விஜய் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜவானில் விஜய் - தீபிகா
இந்நிலையில் நடிகர் விஜய், அட்லீ யாத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் காமியோ கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக சில நாட்களுக்கு முன் சில வதந்திகள் வெளிவந்தது.
இதன்பின் சில நாட்களாக இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோணும் காமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியானது. ஏற்கனவே இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வரும் நிலையில், தீபிகாவும் இப்படத்தில் நடிக்கிறாரா என்று பலரும் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், தற்போது விஜய் மற்றும் தீபிகா இருவரும் இப்படத்தில் காமியோவாக வரவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இவை அனைத்தும் நடக்குமா என்று..
ஒன்றாய் வாழ்ந்த காதலி; வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயன்ற காதலன் - அதிரடி திருப்பம் IBC Tamilnadu
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri