தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் குழந்தையின் பெயர் என்ன தெரியுமா.. மிகவும் அழகான பெயர் பாருங்க
தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்
பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஜோடி கொண்டாடப்பட்டு வருகிறார்கள். திரையுலகில் இருவரும் இணைந்து நடித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
பின், கடந்த 2018ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணம் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
நடிகை தீபிகா படுகோன் கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். கர்ப்பமாக இருந்த நிலையிலும், கல்கி படத்தில் நடித்து கொடுத்தார்.
சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.அந்த மகிழ்ச்சியான விஷயத்தை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்திருந்தார்.
அழகான பெயர்
இந்நிலையில், தற்போது, தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஜோடி இணைந்து dua padukone singh என பெயர் வைத்துள்ளனர். இதற்கு ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
