அட்லீயின் ஜவான் படத்தில் இணைந்த டாப் பாலிவுட் ஹீரோயின்
அட்லீ தற்போது ஹிந்தியில் ஷாருக் கான் நடிப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். அந்த படத்திற்கு ஜவான் என பெயரிடப்பட்டு இருக்கும் நிலையில் சமீபத்தில் ரிலீஸ் ஆன டைட்டில் டீஸர் வீடியோவுக்கு இணையத்தில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
இந்த படத்தில் ஷாருக் கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தற்போது திருமணம் முடித்து ஹனிமூனில் இருக்கும் நயன்தாரா விரைவில் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார்.
தீபிகா படுகோன்
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு டாப் பாலிவுட் நடிகை படத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது. தீபிகா படுகோன் இந்த படத்தில் சின்ன ரோலில் நடிக்க போகிறாராம்.
சமீபத்தில் ஹைதராபாத்துக்கு வந்த நடிகர் ஷாருக்கான் அட்லீ உடன் சேர்ந்து தீபிகாவை சந்தித்து இருக்கிறார். படத்தில் அவரது ரோல் மற்றும் ஷூட்டிங் தேதிகள் பற்றியும் பேசி இருக்கிறார்கள். தீபிகா ஒப்புக்கொண்ட நிலையில் விரைவில் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறார்.



ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
