தீபிகா படுகோனின் புதிய படத்தை குப்பை படம் என கூறிய நடிகை கங்கனா ரனாத் !
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாகவும், இந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் தீபிகா படுகோன்.
இவர் நடிப்பில் கெஹ்ரயான் என்ற திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி உள்பட பலர் நடித்துள்ளனர்.
தீபிகா படுகோன் சர்ச்சையான காட்சிகளில் நடித்துள்ள இப்படம் படம் கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தை குப்பை என நடிகை கங்கனா ரனாத் விமர்சித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, "நானும் இந்த தலைமுறையை சேர்ந்தவள்தான். தயவு செய்து டீன் ஏஜ் நவீன திரைப்படம் என்ற பெயரில் குப்பைகளை விற்க வேண்டாம்.
தரமற்ற திரைப்படங்கள் எப்போதும் தரமற்றமவை தான். எந்த வகை ஆபாசத்தை காட்டியும் அந்த படத்தை காப்பாற்ற முடியாது. இது அடிப்படை உண்மை. கெஹ்ரையான் படத்தில் எந்தவிதமான ஆழமான கருத்துகளும் இல்லை" என தெரிவித்துள்ளார்.