மிகப்பெரிய சம்பளத்தை நிராகரித்தது ஏன்? அட்லீ படத்தில் நடிக்கும் தீபிகா படுகோன் சொன்ன காரணம்

By Parthiban.A Nov 17, 2025 03:56 PM GMT
Report

இந்திய அளவில் டாப் ஹீரோயினாக வலம் வருபவர் தீபிகா படுகோன். அவர் தனது குழந்தையை பார்த்துக்கொள்வதற்காக 8 மணி நேரம் மட்டுமே ஷூட்டிங் வருவேன் என கூறியதாக சில மாதங்களுக்கு முன் சர்ச்சை எழுந்தது.

அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல பிரபலங்கள் பேசி இருந்தனர். தீபிகா படுகோன் சில பிரம்மாண்ட படங்களில் இருந்து வெளியேறியதும் சினிமா துறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அனிமல் பட புகழ் இயக்குனரின் ஸ்பிரிட் படத்தில் இருந்து தீபிகா விலகியபோது இயக்குனர் அவரை தாக்கி ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதற்கு தீபிகாவும் பதிலடி கொடுத்திருந்தார். அதன்பின் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் உடன் தீபிகா தற்போது நடித்து வருகிறார்.

மிகப்பெரிய சம்பளத்தை நிராகரித்தது ஏன்? அட்லீ படத்தில் நடிக்கும் தீபிகா படுகோன் சொன்ன காரணம் | Deepika Padukone On Rejecting Huge Salary Films

பெரிய சம்பளம் மட்டும் போதுமா?

இந்நிலையில் தீபிகா படுகோன் அளித்த பேட்டியில் தான் மிகப்பெரிய சம்பளத்தை எல்லாம் நிராகரித்து இருப்பதாக கூறி இருக்கிறார்.

"எனக்கு பெரிய தொகையை சம்பளமாக தர முன்வருகிறார்கள். அது மட்டுமே போதும் எனவும் நினைகிறார்கள். அது மட்டும் போதாது."

"என் ரோல் authentic ஆக இருக்கிறதா.. சில நேரம் commercial ஆக பெரிதாக இல்லை என்றாலும், அந்த நபர் மீது நம்பிக்கை இருந்தால் அல்லது சொல்லவரும் மெசேஜ் மீது நம்பிக்கை இருந்தால் நான் அதை ஏற்று கொள்வேன்."

மேலும் 8 மணி நேர ஷிப்ட் பற்றி பேசிய அவர் "அளவுக்கு அதிகமாக வேலை செய்வதை சாதாரண ஒரு விஷயம் ஆகிவிட்டார்கள். அதை அர்பணிப்பு என சொல்கிறார்கள். ஒரு மனிதனின் உடல் மற்றும் மூளைக்கு 8 மணி நேரம் ஒரு நாள் வேலை போதுமானது" என தீபிகா தெரிவித்து இருக்கிறார். 

மிகப்பெரிய சம்பளத்தை நிராகரித்தது ஏன்? அட்லீ படத்தில் நடிக்கும் தீபிகா படுகோன் சொன்ன காரணம் | Deepika Padukone On Rejecting Huge Salary Films

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US