தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஜோடிக்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்துக்கள்
தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்
பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் கொண்டாடப்பட்டு வருகிறார்கள். திரையுலகில் இருவரும் இணைந்து நடித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணம் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. திரையுலக சேர்ந்த பலரும் இதில் கலந்துகொண்டனர்.

நடிகை தீபிகா படுகோன் கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். கர்ப்பமாக இருந்த நிலையிலும், கல்கி படத்தில் நடித்து கொடுத்தார்.

குழந்தை பிறந்தது
இந்த நிலையில், கர்ப்பமாக இருந்த நடிகை தீபிகா படுகோனுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

You May Like This Video
கரூரிலும் எகிப்திலும் உள்ள தமிழ் பெயர்; இரும்பை கண்டுபிடித்த தமிழன் - அமர்நாத் ராமகிருஷ்ணன் News Lankasri
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan