45 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க அதிக சம்பளம் வாங்கும் தீபிகா படுகோன்.. எவ்வளவு தெரியுமா
தீபிகா படுகோன்
பாலிவுட் திரையுலகிம் மூலம் பிரபலமாகி இன்று உலகளவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவராக தீபிகா படுகோன் இருக்கிறார். ஆனால், இவர் முதன் முதலில் அறிமுகமானது கன்னடத்தில் வெளிவந்த ஐஸ்வர்யா என்கிற படத்தின் மூலம் தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.
இதன்பின், ஓம் ஷாந்தி ஓம் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட்டில் கலக்கிய தீபிகா படுகோன் முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெற்றார். இவர் நடிப்பில் கடைசியாக கலக்கி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அடுத்ததாக கிங் மற்றும் ஸ்பிரிட் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகவுள்ள படம் தான் ஸ்பிரிட். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தீபிகா சம்பளம்
இந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை தீபிகா படுகோன் ரூ. 20 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இதற்கு தயாரிப்பாளரும் சரி என கூறியுள்ளனர். இதன்மூலம் தனது திரை வாழ்க்கையில் இப்படத்திற்காக தான் தீபிகா அதிக சம்பளம் வாங்கவுள்ளார் என்கின்றனர்.
இதற்கு முன் கல்கி திரைப்படத்திலும் பிரபாஸ் உடன் இணைந்து தீபிகா படுகோன் நடித்திருந்தார். ஆனால், ஸ்பிரிட் படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நல்லா இருக்குய்யா உங்க ரகசிய கூட்டு - விஜய்யை வெளுத்த பிரபலம் IBC Tamilnadu
