நெருக்கமான காட்சிகளில் நடித்ததற்கு உங்கள் கணவர் என்ன கூறினார்- கேள்வி கேட்டவர்களை அசர வைத்த நடிகை தீபிகா படுகோனே
இந்திய சினிமா கொண்டாடும் நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே.
சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் மக்களிடம் நன்கு அறிமுகமானார், அப்படத்திற்கு பிறகு கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இவர் புதியதாக நடித்துள்ள கெஹ்ரையன் திரைப்படம் அமேசான் பிரைமில் வரும் பிப்ரவரி 11 அதாவது நாளை வெளியாகிறது. இப்படத்தின் டிரைலரில் தீபிகா நடிகர் சித்தாந்துடன் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார்.
இதுகுறித்து ஒரு பத்திரிக்கையாளர், மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க உங்களது கணவர் சம்மதித்தாரா என கேட்டுள்ளார்.
அதற்கு நடிகை தீபிகா, நான் மற்ற நடிகர்களுடன் லிப் லாக் காட்சிகளில் நடிப்பதை ரன்வீர் சிங் பெருமையாக நினைப்பதாகவும், என்னுடைய நடிப்பைப் பார்த்து ரன்வீர் சிங் பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.