ராணியாக வாழும் நடிகை தீபிகா படுகோனேவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு விவரம்- இத்தனை கோடிகளா?
தீபிகா படுகோனே
கன்னடத்தில் ஐஸ்வர்யா என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் தீபிகா படுகோனே.
அதன்பின் அப்படியே பாலிவுட் பக்கம் வந்தவர் ஆரம்பத்தில் சந்திக்காத அவமானங்கள் இல்லை. ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் திரைப்படம் அவருக்கு பாலிவுட்டில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கியது.
முதல் படமே ப்ளாக் பஸ்டர் வெற்றிக் கொடுக்க அடுத்தடுத்து முன்னணி நடிகர்களான சல்மான் கான், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், சயிஃப் அலிகான் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
பாலிவுட்டில் உச்சத்தை எட்டியவர் ஹாலிவுட்டில் XXX என்ற படம் மூலம் கால் பதித்தார்.
கடந்த வருடம் ஷாருக்கானுடன் பதான், ஜவான், ஹிருத்திக் ரோஷனுடன் ஃபைட்டர் ஆகிய படங்களில் நடித்து வெற்றிக்கண்டார்.

சொத்து மதிப்பு
இவர் 2018ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடும் தீபிகா படுகோனேவின் சொத்து மதிப்பு ரூ. 500 கோடிக்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

BYD அறிமுகப்படுத்திய புதிய ஆடம்பர மின்சார கார் - 5 நிமிடபிளாஷ் சார்ஜ், 1000 கிமீ பயணம் News Lankasri
கனடா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு: வரிவிதிப்பு மூலம் பதிலடி கொடுக்க திட்டம் News Lankasri