சன் டிவிக்கு100 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்! முக்கிய சீரியலால் வெடித்த பிரச்சனை
சன் டிவி தான் தற்போது தமிழ் சின்னத்திரையில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் சன் டிவி இரண்டாம் இடத்தில் இருக்கும் விஜய் டிவியை விட நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது.
இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் கதையை அனுமதி இல்லாமல் பெங்காலி மொழியில் ரிமேக் செய்து ஒளிபரப்பியதற்காக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு விகடன் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
அதே கதையை வைத்து கதாபாத்திரங்களின் பெயரை மட்டும் மாற்றி Debi என்கிற பெயரில் ரிமேக் செய்து சன் பங்ளா தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இருக்கின்றனர் என குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது.
15 நாட்களுக்குல் விளக்கம் அளிக்க வேண்டும், அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விகடன் நிறுவனம் சார்பில் அனுப்பட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கால் வைக்காமல் ஏணியில் ஏறும் சமந்தா! வெறித்தனமான ஒர்கவுட் வீடியோ வைரல்