சூர்யா குடும்பம் மீது வேண்டுமென்றே பரப்பப்படும் வன்மம்.. திடீரென வைரலாகும் வீடியோ
சூர்யா குடும்பம்
சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா என சூர்யாவின் குடும்பம் சினிமாவில் பயணித்து வருகிறார்கள். சூர்யாவின் தங்கை பிருந்தா பின்னணி பாடகி ஆவார். சினிமா மட்டுமின்றி தங்களது அகரம் அறக்கட்டளை மூலம் பல்லாயிர கணக்கான மாணவர்களை படிக்க வைத்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட 15ம் ஆண்டு அகரம் அறக்கட்டளை விட பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சூர்யா குடும்பத்திற்கு எதிராக, அவர்கள் மீது வன்மத்தை கக்கும் விதமாக சிலர் சமூக வலைத்தளத்தில் பழைய விஷயங்களை கிண்டிகேலரி வைரல் செய்து வருகிறார்கள்.
அதில் ஒன்றாக கடந்த ஓராண்டுக்கு முன் பாலிவுட் பட ப்ரோமோஷன் விழாவில் ஜோதிகா பேசியதை தற்போது வைரலாக்குகின்றனர்.
வேண்டுமென்றே பரப்பப்படும் வன்மம்
அவர் கூறியதாவது, "நான் மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்தேன். அவருக்கும் அஜய் தேவ்கனுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. படப்பிடிப்பில் இருவரும் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து போனார்கள். தமிழில் நான் கிட்டதட்ட எல்லா நடிகர்களுடனும் நடித்திருக்கிறேன். ஆனால், நான் நடித்த படத்தின் போஸ்டரில் கூட என் முகம் வராத. ஆனால் அஜய் மற்றும் மம்மூட்டி போன்ற நடிகர்கள் சினிமாவிற்கு திருப்பி கொடுக்க நினைக்கிறார்கள். நிறை பேர் சினிமாவில் இருந்து பெற்று கொள்கிறார்கள். ஆனா ஒரு சிலர்தான் திருப்பி தர நினைக்கிறார்கள்" என பேசியிருந்தார்.
இது கடந்த ஆண்டு ஜோதிகா பேசியது. தென்னிந்திய சினிமா குறித்து ஜோதிகா இப்படி பேசியதற்கு, அப்போது பலரும் கடும் விமர்சனத்தை அவர் மீது வைத்தனர். அதன்பின், அந்த சர்ச்சை அப்படியே அமைதியாகிவிட்டது. ஆனால், தற்போது திடீரென இந்த வீடியோவை சிலர் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இவை சூர்யா குடும்பம் மீது வேண்டுமென்றே பரப்பப்படும் வன்மமாக பார்க்கப்படுகிறது.