மூன்று நாட்களில் டிமாண்டி காலனி 2 செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
டிமாண்டி காலனி 2
இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் அறிமுக இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் டிமாண்டி காலனி. இப்படத்தில் கதாநாயகனாக அருள்நிதி நடித்திருந்தார்.
அறிமுக படமே இயக்குனர் அஜய் ஞானமுத்துவிற்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. இதை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு பின் டிமாண்டி காலனி 2 திரைப்படம் வெளிவந்துள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கான இணைப்பை அழகாக திரையில் காட்டியிருந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. மேலும், அஜய் ஞானமுத்துவிற்கு இப்படம் நல்ல கம் பேக்காக அமைந்துள்ளது என்றும், அருள்நிதி மற்றும் பிரியா பவானி ஷங்கர் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் ரசிகர்களால் கூறப்பட்டது.
மூன்று நாட்கள் வசூல்
இந்த நிலையில், டிமாண்டி காலனி 2 மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 15.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங் என சொல்லப்படுகிறது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
