டிமாண்டி காலனி 3 படத்தை வாங்கிய ஜீ நிறுவனம்.. அதுவும் இத்தனை கோடி கொடுத்தா!!
டிமாண்டி காலனி
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்து அனைவரையும் மிரள வைத்த திரைப்படம் டிமாண்டி காலனி. இப்படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்திருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின், டிமாண்டி காலனி 2 வெளிவந்தது. ஆம், கடந்த 2024ஆம் ஆண்டு டிமாண்டி காலனி 2 திரைப்படம் வெளிவந்து மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் அருள்நிதி உடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் நடித்திருந்தனர்.
டிமாண்டி காலனி 3
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த டிமாண்டி காலனி 3 திரைப்படத்தின் First லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது. இதன்பின் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் டிமாண்டி காலனி 3 படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ஜீ நிறுவனம் வாங்கியுள்ளது. அதுவும் ரூ. 50 கோடிக்கு வாங்கியுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். இது மிகப்பெரிய ரெகார்ட் என கூறப்படுகிறது.