தங்கலான் ரிலீஸ் நேரத்தில் வந்த சிக்கல்.. ஸ்டூடியோ கிரீனுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு
விக்ரம் - மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் படம் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15, 2024) ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு தீவிரமாக செய்து வருகிறது.
இந்த நேரத்தில் தங்கலான் ரிலீசுக்கு ஒரு சிக்கல் வந்திருக்கிறது. அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் வாங்கிய கடனில் இன்னும் ₹10.35 கோடி ரூபாய் திரும்ப செலுத்தாதது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

1 கோடி கட்ட உத்தரவு
தங்கலான் ரிலீசுக்கு முன் ₹1 கோடி ருபாய் கட்ட வேண்டும் என்றும், அதன் பிறகு ரிலீஸ் செய்து கொள்ளலாம் என நீதிமன்றம் கூறி இருக்கிறது.
மேலும் ஸ்டூடியோ கிரீனின் மற்றொரு படமான கங்குவா ரிலீஸ் முன்பும் ₹1 கோடி டெபாசிட் செய்யவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

கங்கையில் மூழ்கினால் போகாத பாவம் பாஜகவில் சேர்ந்தால் போயிடும் - யார் சொன்னது தெரியுமா? IBC Tamilnadu
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri