தென்னிந்திய நடிகை என்றால் அவமானப் படுத்துவாங்க.. சமந்தா சொன்ன ஷாக்கிங் புகார்
சமந்தா
சமந்தா தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளால் ஒருவர். அவர் ஊ சொல்றியா பாடல் மூலமாக தற்போது ஹிந்தியிலும் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்துவிட்டார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், 'பல வருடங்களுக்கு முன்பு ஹிந்தி சினிமா தான் டாப் என சொல்வார்கள். ஆனால் தற்போது ஹிந்தியை விட தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள் அதிகம் சாதித்து இருக்கிறது' என தெரிவித்து இருக்கிறார்.

அசிங்கப்படுத்துவாங்க
"முன்பெல்லாம் ஆடை வடிவமைப்பாளர்களிடம் இருந்து ட்ரெஸ் வாங்குவதே பெரிய கஷ்டமாக இருக்கும், அந்த அளவுக்கு அசிங்கப்படுத்துவாங்க. Who are you? South actor? What south? இப்படியெல்லாம் கேட்பார்கள்" என சமந்தா கூறி இருக்கிறார்.
தற்போது இந்த நிலை அதிகம் மாறி வந்துவிட்டது என சமந்தா கூறி இருக்கிறார்.

லோகேஷ் பட வாய்ப்பை நிராகரித்ததற்கு இது தான் காரணம்.. லாரன்ஸ் ஓபன் டாக்