Despicable Me 4 திரை விமர்சனம்
ஹாலிவுட் திரையுலகில் அனிமேஷன் படங்களுக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் பாக்ஸ் ஆபிஸ் வகையில் அசால்ட் ஆக 1 பில்லியன் டாலர் வசூல் ஈட்டும் அளவிற்கு அனிமேஷன் படங்களுக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்க, Chris Renaud, Patrick Delage இயக்கத்தில் வெளிவந்துள்ள Despicable me 4 எப்படியுள்ளது என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே க்ரூ தன் பள்ளி அலுமினி மீட்டிங்கிற்காக செல்கிறார். அங்கு அவருடைய நண்பர் மேக்ஸ் சிறந்த வில்லன் விருதை வெல்ல், க்ரூ, மேக்ஸை அங்கையே கைது செய்கிறார்.
அதனால் அன்றே க்ரூவை பழிவாங்க வேண்டும் என்று மேக்ஸ் முடிவு செய்ய, அடுத்த நாளே சிறையிலிருந்து தப்பிக்கிறார். அதே நேரத்தில் க்ரூ தன் குடும்பத்துடன் தங்களின் அடையாளங்களை மாற்றிக்கொண்டு தலைமறைவாகிறார்.
பிறகு மேக்ஸ், க்ரூவை கண்டிப்பிடிக்க, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
அனிமேஷன் பட விரும்பிகளுக்கு கண்டிப்பாக இந்த Despicable me 4 ஒரு விருந்து தான். க்ரூ தன் குடும்பத்துடன் செய்யும் லூட்டிகள் சிறப்பு.
அதிலும் தலைமறைவான இடத்தில் வரும் சுட்டி பப்பி என்ற பெண்ணின் கதாபாத்திரமும் ரசிக்க வைக்கிறது.
இதெல்லாம் விட சூப்பர் பவருடன் வரும் மினியன்ஸ் செய்யும் அட்டகாசம் ஒட்டு மொத்த சூப்பர் ஹீரோக்களையும் நிக்க வைத்து கலாய்த்துள்ளனர். நல்லது செய்கிறேன் என்ற பெயரில் சூப்பர் ஹீரோக்கள் எப்படி ஊரை சேதப்படுத்துகின்றனர் என்பது போல் ஒரு காட்சி மினியன்ஸ் வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளனர்.
பப்பி-ஆக ஒரு Pet-யை திருடப்போகும் காட்சி சுவாரஸ்யம், இதெல்லாம் விட க்ரூ-வின் சுட்டிக்குழந்தை ரியாக்ஸன், கடைசியாக வில்லனிடம் சேர்ந்து அவன் பேச பேச இந்த குழந்தை கொடுக்கும் ரியாக்ஸன் எல்லாம் வேற லெவல்.
ஆனால், எத்தனை சுவாரஸ்யமான காட்சிகள் இருந்தாலும், கிளைமேக்ஸில் மேக்ஸை க்ரூ வெல்லும் இடம் என்னயா அதுக்குள்ள முடிச்சுட்டீங்க என்பது போல் உள்ளது.
க்ளாப்ஸ்
தமிழ் டப்பிங் சிறப்பாக உள்ளது.
மினியன்ஸ் சம்மந்தப்பட்ட காட்சிகள்.
பல்ப்ஸ்
கிளைமேக்ஸ் இன்னமும் கொஞ்சம் Fun இருந்திருக்கலாம்.