ரஜினியின் வேட்டையன் படத்தின் உண்மையான பட்ஜெட் எத்தனை கோடி?.. ஞானவேல் சொன்ன தகவல்
வேட்டையன்
ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேலுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு ரஜினியை வைத்து படம் இயக்குவது தான்.
வேட்டையன் என்ற படத்தை ரஜினியை வைத்து இயக்கியுள்ளார், அதில் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி என பலர் நடித்துள்ளனர்.
வரும் அக்டோபர் 10ம் தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ப்ரீ புக்கிங்கிலேயே படம் இதுவரை ரூ. 40 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் நாளில் ரூ. 70 முதல் ரூ. 80 கோடி வரை வசூல் வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பேட்டி
இந்த படத்தில் ரஜினிகாந்த் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ள நிலையில் அமிதாப் பச்சன் மனித உரிமை கண்காணிப்பாளராக உள்ளார். இவர்கள் இருவரையும் எதிரும் புதிருமாக்கி படத்தில் மோதவிட்டுள்ளார் ஞானவேல்.
தற்போது பட புரொமோஷன் ஒன்றில் இயக்குனர் ஞானவேல் பேசும்போது, ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் பட்ஜெட் ரூ. 300 கோடி என கூறியுள்ளார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
