நடிகர் விஷாலின் அடுத்த படம் யாருடன், வெளிவந்த தகவல்- மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி
நடிகர் விஷால்
தமிழ் சினிமாவில் திருமண வயது வந்தும் சிங்கிளாகவே இருக்கும் ஒரு முன்னணி நடிகர் விஷால். இவரது நடிப்பில் அண்மையில் ரத்னம் திரைப்படம் வெளியாகி இருந்தது.
ஹரி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார்.
படமும் வெளியாகி சாதாரண வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் அடுத்து துப்பறிவாளன் 2 படம் வெளியாக இருக்கிறது.
முதல் பாகத்தை விட 2ம் பாக கதைக்களம் கண்டிப்பாக விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
அடுத்த படம்
இந்த நிலையில் நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 படத்தை தொடர்ந்து யாருடன் கூட்டணி அமைப்பார் என பேச்சு வர தற்போது ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதாவது மருது பட வெற்றிக் கூட்டணி முத்தையா மற்றும் விஷால் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
