இந்தி படத்தில் மீண்டும் நடிக்கப்போகும் ராஷ்மிகா மந்தனா.. வெளியான புது அப்டேட் இதோ...
ராஷ்மிகா மந்தனா
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான், வாரிசு,போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் புஷ்பா, சீதா ராமம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்த இவர் இந்தியில் அனிமல் படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன்முலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.
பிறகு,தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், தற்போது இவர் புஷ்பா 2, விக்கி கவுஷலுடன் சாவா,சிக்கந்தர், தமிழில் தனுஷுடன் குபேரா போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார்.

புதிய படம்
இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா தனது கவனத்தை ஹாரர் பக்கம் திருப்பிருக்கிறார்.
அதாவது ஆதித்யா சர்போத்தர் இயக்கத்தில் இவர் வேம்பையர் ஆப் விஜயநகரம் என்ற ஹாரர் கலந்த காமெடி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த ஹாரர் படம் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த 2026–27 பட்ஜெட் - புதிய நலத்திட்டங்கள் என்னென்ன? IBC Tamilnadu
சில நிமிடங்களில் 30,000 பேரைக் கொன்ற கொடிய எரிமலை... பல தசாப்த கால அமைதிக்குப் பிறகு மீண்டும் News Lankasri