வலிமை படத்தின் டிஜிட்டல் ரைஸ்ட் மட்டுமே இத்தனை கோடிக்கு விலைபோனதா?
தமிழ் சினிமாவின் பெரிய நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் படங்களின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. பீஸ்ட் பட படப்பிடிப்பு இப்போது தான் தொடங்கப்பட்டது.
அதற்கு முன் ரஜினியின் அண்ணாத்த பட படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன. இப்படங்களுக்கு முன்னரே அஜித்தின் வலிமை பட படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது.
வலிமை படம் ஓரளவிற்கு படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இவ்வருட ஸ்பெஷல் தினத்தில் வலிமை திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என்கின்றனர். இப்படி வலிமை படப்பிடிப்பு குறித்து தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் வியாபாரம் குறித்து சில விஷயங்கள் கசிந்துள்ளன.
அதாவது வலிமை படத்தின் ஹிந்தி டப்பிங், சாட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் என மொத்தமாக ரூ. 100 கோடி விலைபோனதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமானது இல்லை.