சீரியல் நடிகை வைஷ்ணவி இறப்பிற்கு நான் தான் காரணமா?- பல வருடங்கள் பிறகு பேசிய தேவ்
நடிகை வைஷ்ணவி
சின்னத்திரை பிரபலங்கள் பலர் ஏதோ ஒரு காரணத்தால் தற்கொலை செய்துகொண்ட இறந்தனர், அதில் ஒருவர் தான் நடிகை வைஷ்ணவி.
சீரியல், படங்கள் என நடித்துவந்த இவர் கடந்த 2006ம் ஆண்டு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார், இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அவரது இறப்பிற்கு வைஷ்ணவியுடன் நடித்த நடிகர் தேவ் தான் காரணம் என அவரது பெற்றோர் போலீஸில் புகார் அளித்திருந்தனர்.
இதனால் இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம் தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டு தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தேவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மகளிர் நீதிமன்றம் விதித்த 5 ஆண்டு சிறைத் தண்டணையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
தேவ் பேட்டி
சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் தேவ், வைஷ்ணவி இறப்பு குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், என்ன நடந்தது என்பது எனக்கும் அவளுக்கும் தான் தெரியும், சாட்சி சொல்ல வேண்டியவள் உயிரோடு இல்லை, நான் சொன்னால் மட்டும் நம்ப போறாங்களா.

நடிகர் கார்த்தியின் 27வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப்போகும் பிரபல சீரியல் நடிகை- அடித்த அதிர்ஷ்டம்
என்ன நடந்தது என்பது தெரியாமல் கமெண்ட் போடுவதற்கு யாருக்கும் அருகதையும், உரிமையும், தகுதியும் கிடையாது, எங்கள் இருவருக்கும் மட்டும்தான் என்ன நடந்தது என்று தெரியும்.
இந்த உலகத்தில் வாழ்பவர்கள் சொல்வதை பொய் என்று தான் சொல்கிறார்களே தவிர அவர்கள் சொல்வதும் உண்மை என்று யாரும் காது கொடுத்து கேட்பதில்லை என்று எமோஷனலாக பேசி இருக்கிறார்.