மீசைய முறுக்கு 2 பட வாய்ப்பை நிராகரித்த முன்னணி நட்சத்திரம்.. காரணம் என்ன தெரியுமா
மீசைய முறுக்கு 2
ஹிப் ஹாப் ஆதி இயக்கி, இசையமைத்து, நடித்து 2017ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மீசைய முறுக்கு. இப்படத்தை சுந்தர் சி - குஷ்பூ இணைந்து தயாரித்திருந்தார். இளைஞர்களை கவர்ந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இப்படத்தில் விவேக், ஆத்மீகா, விஜயலக்ஷ்மி, ஷா ரா, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் நடித்திருந்தனர்.
மீசைய முறுக்கு முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது 8 ஆண்டுகளுக்கு பின் மீசைய முறுக்கு 2 உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைத்து, இயக்கி ஹீரோவாகவும் நடித்து வருகிறார் ஹிப் ஹாப் ஆதி. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
வாய்ப்பை நிராகரித்த நட்சத்திரம்
மீசைய முறுக்கு 2 படத்தில் தாதா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் பிரபல முன்னணி நட்சத்திரம் ஒருவர் அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். அவர் வேறு யாருமில்லை, தேனிசை தென்றல் தேவாதான்.
இதை அவரே சமீபத்தில் கூறியுள்ளார். இதில், "ஹிப் ஹாப் ஆதி எனக்கு மீசைய முறுக்கு 2 படத்தின் கதையை கூறினார். மிகவும் அற்புதமான கதை. நான்தான் தாதா கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என கூறினார். நான் தாதா வா!! இந்த படத்தை வேண்டாம் என கூறியதற்கு காரணம், இப்போது நான் பாட்டு கச்சேரிகளில் பிசியாக இருக்கிறேன். ஒரு வாரம் சென்னையில் இருக்கிறேன், அப்பறோம் Sydney போறேன், மெல்பர்ன், பாரிஸ், ஜப்பான் என செல்கிறேன். இந்த நேரத்தில் அவர்களுக்காக என்னால் ஒத்துழைக்க முடியாது. நேரத்திற்கு என்னால் படப்பிடிப்புக்கு செல்ல முடியாது" என கூறினார்.
மேலும் பேசிய அவர், "மற்றொரு ஒரு விஷயம் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், எனக்கு நடிக்க தெரியாது. அந்த ஸ்கிரிப்ட்-ஐ மனப்பாடம் பண்ணி சொல்லணும். நான் போய் படப்பிடிப்பில் நடிப்பேன், வசனத்தை மறந்துவிடுவேன்" என கூறினார்.