எந்த ஒரு நடிகையும் செய்ததை செய்த தேவயானி.. இப்படி கூறிவிட்டாரே என ஷாக்கான ரசிகர்கள்
தேவயானி - மீனா
திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தேவயானி. இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை மீனாவை பற்றி புகழ்ந்து பேசினார்.
குறிப்பாக நான் மீனாவின் மிகப்பெரிய ரசிகை அவரை பார்த்து தான் சினிமாவுக்கு வந்தேன் என கூறினார். இதை கேட்ட ரசிகர்கள், எந்த ஒரு நடிகையும் மற்றொரு நடிகையை பார்த்து சொல்லாத விஷயத்தை தேவயானி கூறிவிட்டாரே என ஷாக்காகி உள்ளனர்.
நடிகை தேவயானி இது மட்டுமின்றி நடிகை மீனா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசியதில்
"நான் தமிழ் சினிமாவிற்கு வரும் போது மீனாவை பார்த்துவிட்டு அவருடைய ரசிகையாக தான் காலடி எடுத்து வைத்தேன்.
நான் உங்களுடைய அழகுக்கும், உங்களுடைய கடின உழைப்பிற்கும், உங்களுடைய அழகான கண்ணுக்கும் மிகப்பெரிய ரசிகை. எத்தனை படங்கள் எவ்வளவு பிரச்சனை, அனைத்தையும் அழகாக கடந்து வந்துள்ளீர்கள்.
மீனா இந்த அளவிற்கு இருக்க அவருடைய தாய் முக்கிய காரணம். தாய் இல்லை என்றால் மீனா மட்டுமல்ல எந்த நடிகையும் வாழ்க்கையில முன்னேறவே முடியாது.
அம்மாவும், அப்பாவும் கண்டிப்பாக உறுதுணையாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். என்னுடைய அம்மா மற்றும் அப்பா இருவரும் எனக்காக பல Sacrifice பண்ணி இருக்கிறார்கள். அதனால் தான் இந்த இடத்தில் நான் நிற்கிறேன் " என பேசியுள்ளார்.
இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா, அட இவரா

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
