சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்த தேவயானி.. அஜித் படத்தால் நேர்ந்த அதிசயம்
தேவயானி
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை தேவயானி.
இவர் நமது சினிஉலகம் Youtube சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இந்த பேட்டியில் தன்னுடைய திரை பயணத்தையும், படங்கள் குறித்து, சொந்த வாழ்க்கையை பற்றியும் பகிர்ந்துகொண்டார்.
மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களையும் கூறினார். அப்படி தான் காதல் கோட்டை படம் குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது :
'காதல் கோட்டை படம் கமிட் ஆனதுபோது அந்த ஒரு படம் மட்டும் தான் என் கைவசம் இருந்தது. அந்த படம் ஓடவில்லை என்றால் நான், சினிமாவை விட்டு விலகி இருப்பேன்'.
'கண்டிப்பாக காதல் கோட்டை படம் வெற்றிபெறும் என நான் நினைந்து கடுமையாக உழைத்தேன். அப்படம் நாங்கள் அனைவரும் நினைத்ததை விட மாபெரும் அளவில் வெற்றியடைந்தது'. அந்த படம் தான் அடுத்தடுத்து பெரிய படங்களின் வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்தது' என கூறியுள்ளார் தேவயானி.
ரஜினியுடன் மோதும் சிவகார்த்திகேயன்.. தனது தலைவரை நேருக்கு நேர் சந்திக்கும் ரசிகன்