அழகாக புடவை கட்டும் நடிகை தேவயானியா இது, பேன்ட்-சர்ட் போட்ட அவரது நியூ லுக்- இதோ
நடிகை தேவயானி தமிழ் சினிமா ரசிகர்களால் 90களில் கொண்டாடப்பட்ட ஒரு முன்னணி நடிகை. பெங்காலி மொழியில் முதன்முதலாக நடிக்க தொடங்கிய அவர் பின் மலையாள படங்களில் நடித்தார்.
அதன்பிறகு தான் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இப்போது இரண்டு மகள்கள் உள்ளனர்.
தேவயானி படங்களை தாண்டி சீரியல்களிலும் நடித்துள்ளார், அவரது கோலங்கள் தொடரை பற்றி பேசாத நபர்களே இல்லை. இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுபுது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்து வருகிறார்.
எப்போதும் புடவையில் அழகாக காணப்படும் நடிகை தேவயானி பேன்ட்-சர்ட் என மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம தேவயானியாக இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.