அந்த சீரியலுக்காக அஜித் பட வாய்ப்பை நிராகரித்துள்ள நடிகை தேவயானி... எந்த படம் தெரியுமா?
தேவயானி
நடிகை தேவயானி, தமிழ் சினிமா ரசிகர்களால் 90களில் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி படங்களில் நடித்தவருக்கு தமிழில் பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது அஜித்துடன் நடித்த காதல் கோட்டை தான்.
அதன்பின் தேவயானிக்கு பெரிய மார்க்கெட் இருந்தது, இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து செட்டில் ஆனார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர், ஒருவர் இப்போது சரிகமப பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திறமையை காட்டி வருகிறார்.
அஜித் படம்
தற்போது சன் டிவியில் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற சீரியலை இயக்கிவரும் திருச்செல்வம் நடிகை தேவயானி குறித்து பேசியுள்ளார். அதில் அவர், தேவயானி மேம் கோலங்கள் சீரியலுக்காக நிறைய படங்களை ரிஜக்ட் செய்துள்ளார்கள்.
அஜித்தின் வரலாறு படத்தில் நடிக்க ரவிக்குமார் சார் கேட்டார், ஆனால் தேவயானி மேம் பண்ணல.
ஒரு கட்டத்தில் கோலங்கள் சீரியல் மட்டும் பார்த்துவிட்டு தொலைக்காட்சியை ஆஃப் செய்துவிடுவேன் சொல்வாங்க. ஏன் என்று கேட்டால் மற்ற சீரியல் TRP வந்திடுமேனு சொல்லுவாங்க.
நடிகை தேவயானி படங்களை தாண்டி கோலங்கள் சீரியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது நன்றாக தெரிகிறது. கடைசியாக தேவயானி 3 BHK என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.