இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பிரபல நடிகையுடன் ரகசிய திருமணம் செய்துகொண்டாரா.. யார் அந்த நடிகை தெரியுமா
தேவி ஸ்ரீ பிரசாத்
தென்னிந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் இசையில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது.
மேலும், தற்போது சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு இவர் தான் இசையமைக்கிறார். 43 வயதாகும் தேவி ஸ்ரீ பிரசாத் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.
ரகசிய திருமணமா
இந்நிலையில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பிரபல தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னாடா என்பவரை ரசியமாக திருமணம் செய்துகொண்டதாக கூறி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார் நடிகை பூஜிதா பொன்னாடா.
ஆம், இது குறித்து நடிகை பூஜிதா கூறுகையில் " நான் யாரையும் காதலிக்கவில்லை. நான் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இப்படிப்பட்ட தவறான தகவல்களை எங்கிருந்த உருவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை " என தனது வருத்தத்தை நடிகை பூஜிதா பொன்னாடா தெரிவித்துள்ளார்.
இதன்முலம் இந்த கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
